நடிகர் சுனில் ஷெட்டி மகளை காதலிக்கிறாரா கே.எல்.ராகுல்?
பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் இந்தி நடிகையுமான அதியா ஷெட்டியை, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழில் ’12 பி’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ரஜினியின் ’தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் மகள் அதியா ஷெட்டி. இவர் இந்தி படங்களில் நடித்துவருகிறார். இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுபற்றி பாலிவுட் வட்டாரங்கள் கூறும்போது, ‘’பொதுவான நண்பர் மூலம் ராகுலும் அதியாவும் சந்தித்தனர். முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம் பின் காதலானது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். ராகுல் மற்றும் அதியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்களின் தோழி ஆகன்ஷா ரஞ்சன் கபூர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்றன.
இருவரும் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. முன்னதாக, நடிகை நிதி அகர்வாலுடன் கிசுகிசுக்கப்பட்டார் கே.எல்.ராகுல். பின்னர் அதை மறுத்த நிதி, நாங்கள் நண்பர்கள் மட்டும்தான் என்று தெரிவித்திருந்தார்.