விளையாட்டு
இந்திய அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடினம்: நியூசி. கேப்டன்
இந்திய அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடினம்: நியூசி. கேப்டன்
இந்திய அணி வலிமையானது, அதுவும் சொந்த மண்ணில் அதை எதிர்கொள்வது கடினமான காரியம் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது. இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணிக் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடினமான காரியம் என தெரிவித்தார். மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வலிமை வாய்ந்த இந்திய அணியை வெல்வது சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய-நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.