ஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டன் இந்திய விராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த நிட்சான் ஜிந்தாபாலை எதிர்கொண்ட சிந்து, 21-11, 16-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இன்டணானை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டனில் தனிநபர் பிரிவில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம் வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் சையத் மோடி வெண்கலம் வென்றிருந்தார்.