ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் விதிகளை மீறியதால் மூன்றாம் இடத்தில் வந்த தமிழக வீரர் லஷ்மணன் கோவிந்தன் தகுதியிழப்பு செய்யப்பட்டார்.
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த லஷ்மணன் கோவிந்தன் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் தனது பாதையை விட்டு விலகி விதிமுறைகளை மீறி ஓடியதால் அவர் தகுதியிழப்புக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 4ஆம் இடம் பிடித்த சீனாவின் சாங்காங் சாவோ வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.