ஆசிய குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 வெண்கலம்

ஆசிய குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 வெண்கலம்

ஆசிய குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 வெண்கலம்
Published on

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில், சரிதா தேவி உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் மூன்று பேர் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஆசிய சாம்பியன்ஷிப் மகளிர் குத்துச்சண்டை போட்டி வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இதில் 64 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சரிதா தேவி அரையிறுதியில், சீனா வீராங்கனை டோவ் டானிடம் தோல்வியடைந்தார். 54 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட சிக்ஷா, 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பிரியங்கா சவுத்ரி ஆகியோரும் அரையிறுதியில் தோல்வியடைந்தனர். அரையிறுதி வரை முன்னேறியதையடுத்து இந்திய வீராங்கனைகள் மூவருக்கும் வெண்கலப்பதக்கம் கிட்டியது. 

இந்நிலையில்  மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரிகோம், சோனியா லேதர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com