ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்திய இந்திய வீரார்கள்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கம் வென்றுள்ளார். 23 வயதான ஜோதி யாராஜி 13.09 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். அடுத்தடுத்த இடங்களை ஜப்பான் வீராங்கனைகள் பிடித்தனர். நான்காவது இடத்தை இந்தியாவின் நித்யா ராம்ராஜ் பெற்றார்.

abdullah
abdullahpt desk

அதேபோல் 1500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் அஜய்குமார் சரோஜ் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். அதேபோல் மும்முறை தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த அபுபக்கர் அப்துல்லா தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இன்று ஒரே நாளில் மூன்று தங்கம் உள்பட வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com