147 ரன்னில் பாகிஸ்தானை சுருட்டியும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல், ரோகித்!

147 ரன்னில் பாகிஸ்தானை சுருட்டியும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல், ரோகித்!
147 ரன்னில் பாகிஸ்தானை சுருட்டியும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல், ரோகித்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று துவங்கியது 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று இரவு விளையாடி வருகிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இதே துபாயில் 50 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த வகையில் தற்போது நடப்பச் சாம்பியனாக களமிறங்கும் இந்தியா 8வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமுறங்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் இதுவரை 9 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 6 வெற்றியும், பாகிஸ்தான் 2 வெற்றியும் பெற்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெகு விரைவிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. அதுவும் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை. புவனேஷ்குமார் வீசிய மூன்றாவது ஓவரில் மிக எளிதாக வீழ்த்தினார். 4 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி. ரன்களை வாரி வழங்கினாலும் பக்கர் ஸமான் விக்கெட்டை வீழ்த்தினார் ஆவேஷ்கான். பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில் நிதான ஆட்டத்தை கையிலெடுத்தது பாகிஸ்தான். முகமது ரிஸ்வான் மற்றும் இஃப்டிகார் அகமது ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. விக்கெட் வீழ்ச்சியை தடுக்க தடுப்பாட்டம் ஆடினர். இந்நிலையில்தான் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தனது மேஜிக்கை நிகழ்த்தினார்.

13வது ஓவரின் முதல் பந்தில் 28 ரன்கள் எடுத்திருந்த அகமது விக்கெட்டை சாய்த்தார். பின்னர், அவர் வீசிய 15வது ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து பாகிஸ்தான் அணியை மிரள வைத்தார் ஹர்திக். 17வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் தன் பங்கிற்கு அசிப் அலி விக்கெட்டை வீழ்த்தினார். 17 ஓவரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது.

அடுத்து சதாப் கானை 10 ரன்களுக்கும், நசீம் ஷாவை பூஜ்ஜியம் ரன்களுக்கும் இறுதியாக தஹானியை 16 ரன்களுக்கும் இந்திய பவுலர்கள் அர்ஸ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் வழியனுப்பி வைக்க, 19.5 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான் அணி. புவனேஷ்வர் குமார் 26 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, ஹர்திக் பாண்டியா 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 பெரும் தலைகளின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கும் துவக்கம் அதிர்ச்சியே! நதீம் ஷா வீசிய முதல் ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் கே.எல்.ராகுல். இது இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் விராட் கோலி களமிறங்கினார். மீண்டும் அவர் நெருக்கடியான தருணத்தில் களமிறங்கினார். 

முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில், அடுத்த பந்தில் பகர் ஜமான் கேட்சை கோட்டைவிட உயிர் பிழைத்தர் விராட் கோலி. அடுத்தடுத்து தடுப்பாற்றம் மேற்கொண்டார் விராட் கோலி. பின்னர் நிதானமாக பவுண்டரிகளை அடித்தார். ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ரோகித் சர்மாவை எதிர்முனையில் நிற்கவைத்து கோலியே அதிக பந்துகளை சந்தித்தார். ஆனால், நிதானமாக விளையாடிய ரோகித் 8வது ஓவரில் 4வது பந்து ஒரு சிக்ஸர் விளாசினார். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. 35 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியும் ஆட்டமிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com