துவம்சம் செய்யப்போவது யார்? இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

துவம்சம் செய்யப்போவது யார்? இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்
துவம்சம் செய்யப்போவது யார்? இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

ஆசிய கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2-வது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் இருவரும் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஹாங்காங் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவிடமிருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார். இன்றைய போட்டியிலும் அவர் தனது திறமையை நிரூபிப்பார். காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு அணிக்கு கைகொடுக்கும்.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பாக்கா் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோா் அற்புதமாக பேட்டிங் செய்து வருகின்றனா். லீக் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி வீரர்கள் வரிந்துகட்டுவார்கள். அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்கும் முனைப்புடன் இந்தியா இன்று களமிறங்குகிறது.  எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இதையும் படிக்க: வித்தியாசமான முகக்கவசம் அணிந்து பயிற்சி செய்த விராட் கோலி: காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com