இன்று இறுதிப் போட்டி: சவாலான ஃபார்மில் இந்தியா, சாதனைக்கு காத்திருக்கும் பங்களாதேஷ்!

இன்று இறுதிப் போட்டி: சவாலான ஃபார்மில் இந்தியா, சாதனைக்கு காத்திருக்கும் பங்களாதேஷ்!

இன்று இறுதிப் போட்டி: சவாலான ஃபார்மில் இந்தியா, சாதனைக்கு காத்திருக்கும் பங்களாதேஷ்!
Published on

ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறின. தொடர்ந்து நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறியுள்ளன. இதில் பங்களாதேஷிடம் தோற்று பாகிஸ்தான் அணி வெளியேறியது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஆசியக் கோப்பையை வெல்லும்.

இந்த தொடரில், இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்திய அணி, ஆப்கான், ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டியில் தடுமாறியது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும் தவானும் ஃபார்மில் இருக்கிறார்கள். இந்த தொடரில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள். அதோடு, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடுகிறார்கள். விக்கெட் கீப்பர் டோனி இன்னும் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறார். கேதர் ஜாதவ்வும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. இவர்கள் ஃபார்முக்கு திரும்பினால் அணி வலுவடையும்.

வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ராவும், புவனேஷ்வர்குமாரும் சிறப்பாக பந்துவீசினாலும் இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக் கும் என்று கூறப்படுகிறது. இதனால் குல்தீப் யாதவ், சேஹல், ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியம்.

(முஷ்பிஹூர் ரஹிம்)


பங்களாதேஷ் அணியில் காயம் காரணமாக அனுபவ வீரர்கள் தமிம் இக்பால், ‌ஷகிப் அல் ஹசன் விலகிவிட்டாலும் முஷ்பிஹூர் ரஹிம், மிதுன், மஹமத்துல்லா, கேப்டன் மோர்டாசா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் விக்கெட்டை தூக்கிவி ட்டால் பங்களாதேஷை வெல்வது எளிது. அந்த அணியிடம் மிரட்டலான பந்துவீச்சும் இருக்கிறது. சின்ன அணி என்று கருதப்பட்ட பங்களாதே ஷ் அணி இப்போது வலுவான அணியாக மாறி வருகிறது. அந்த அணி எப்போது, எப்படி விஸ்வரூபமெடுக்கும் என்பது தெரியாததால் இன்றைய போட்டி சவாலானதாகவே இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணி இதுவரை 8 ‘நாக்–அவுட்’ சுற்றில் விளையாடி தோல்வியையை சந்தித்திருக்கிறது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அது பங்களாதேஷூக்கு வரலாற்று சாதனையாக இருக்கும். அதே நேரம் வெற்றி பெற்றால் ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும்.

மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com