துபாயில் தோனியை வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்!

துபாயில் தோனியை வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்!

துபாயில் தோனியை வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்!
Published on

ஆசிய கோப்பை போட்டிக்காக, பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் தோனியை, பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோயிப் மாலிக் சந்தித்து வாழ்த்து கூறினார்.

14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. தனது முதல் லீக்கில் ஹாங்காங்குடன் வரும் 18 ஆம் தேதி மோதும் இந்திய அணி, மறுநாளே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் அணி களமிறங்குகிறது. 

இந்திய அணி கடும் வெயிலில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. பாகிஸ்தான் அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று இந்திய வீரர்கள் பயிற்சி பெற்ற இடத்துக்கு வந்த பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், தோனியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் அங்கு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் மாலிக் அவர் அணியுடன் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com