ரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..!

ரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..!

ரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..!

ஆப்கான் அணியில் முக்கிய நட்சத்திர வீரராக வலம் வருகிறார் ரஷித் கான். 20 வயதே ஆன ரஷித் தனது பேட்டிங், பவுலிங் மூலம் ஆப்கான் அணியை முன்னோக்கி அழைத்துச் செல்கிறார். பல நேரங்களில் தனித்தே அவர் அணியை தாங்கி பிடிக்கிறார். அவரது பந்துவீச்சு தனித்து தெரிகிறது. 

தற்போது, ஆசியக் கோப்பை தொடரிலும் ரஷித் கான் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். அதேபோல், பந்துவீச்சிலும் 9 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களையும் சாய்த்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கான் போராடி தோற்றது. ரஷித் கான் 3 விக்கெட்கள் சாய்த்தார். 

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி அன்று ரஷித் கானுக்கு பிறந்தநாள். தனது 20வது பிறந்தநாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷித்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள். வாழ்த்து தெரிவித்தவர்களில் சச்சினும் ஒருவர். ‘நீங்கள் நீண்ட ஆயுள் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையுடன் வாழ வேண்டும்’ என சச்சின் தனது ட்விட்டில் கூறியிருந்தார். 

சச்சினின் இந்த வாழ்த்துச் செய்திக்கு ரிப்ளே செய்த ரஷித் கான் தனது ‘ஆல்டைம் கிரேட் பேட்ஸ்மேன்’ என அதில் கூறியுள்ளார். ‘எல்லா காலங்களிலும் சிறந்த பேட்ஸ்மேனான சச்சின், உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் சாம்பியன் மற்றும் கிரிக்கெட்டின் ஜாம்பவான். உங்கள் வாழ்த்து எனக்கு பெரியது’ என ரஷித் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரஷித் கான் 10 பந்துகளில் 34 ரன்கள் விளாசிய போதும் சச்சின் அவரை பாராட்டி இருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ரஷித் கான் அந்தப் போட்டியில் 19 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களையும் சாய்த்தார்.

ரஷித் கானை பாராட்டி சச்சின் எழுதியது அப்போது வைரலானது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com