227க்கு ஆல்அவுட்டான வங்கதேசம்! பந்துவீச்சில் அஸ்வின் - உமேஷ் யாதவ் அசத்தல்!

227க்கு ஆல்அவுட்டான வங்கதேசம்! பந்துவீச்சில் அஸ்வின் - உமேஷ் யாதவ் அசத்தல்!
227க்கு ஆல்அவுட்டான வங்கதேசம்! பந்துவீச்சில் அஸ்வின் - உமேஷ் யாதவ் அசத்தல்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 227 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி உள்ளது வங்கதேச அணி.

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ஒரு நாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தாலும், டெஸ்ட் தொடரில் முதல் ல்போட்ட்யில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது இந்திய அணி. இந்நிலையில் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வுசெய்தார். 12 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் ஆடும் 11வீரர்களில் ஒருவராக சேர்க்கப்பட்ட ஜெயதேவ் உனாத்கட், இந்திய அணிக்கு 15ஆவது ஓவரில் ஷகிர் ஹாசன் விக்கெட்டை கைப்பற்றி விக்கெட்டுகள் சரிவை தொடங்கிவைத்தார். பின்னர் பந்துவீசிய அஸ்வின் 17ஆவது ஓவரிலேயே ஓபனர் ஷாண்டோவை வெளியேற்றி இரண்டாவது விக்கெட்டை கைப்பற்ற, 39க்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. பின்னர் களமிறங்கிய மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். என்னதான் மொமினுல் ஹக் சிறப்பாக செயல்பட்டாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள், அவருக்கு கைக்கொடுக்காமல் அவுட்டாகிவெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அரைசதமடித்த மொமினுல் ஹக், கடைசிவரை ஆட்டமிழக்காமல் போராடினார். பின்னர் 12 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி 87 ரன்கள் எடுத்திருந்த மொமினுல் ஹக், வங்கதேச அணி 227க்கு 8 விக்கெட்டுகள் இருந்த நிலையில், அஸ்வின் வீசிய பந்தில் 9ஆவது விக்கெட்டாக அவுட்டாகிவெளியேற, 227 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது வங்கதேச அணி.

அற்புதமாக பந்துவீசிய ரவி அஸ்வின் 4 விக்கெட்டுகள், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள், உனாத்கட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் இந்திய அணி 8-0 என்ற நிலையில் ஆடிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com