"இந்திய டி20 அணியில் அஸ்வின் இருக்க வேண்டும்" - முகமது கைஃப்

"இந்திய டி20 அணியில் அஸ்வின் இருக்க வேண்டும்" - முகமது கைஃப்
"இந்திய டி20 அணியில் அஸ்வின் இருக்க வேண்டும்" - முகமது கைஃப்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 27-ந் தேதி சிட்னியில் நடக்கிறது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடருக்கு பிறகு இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அஸ்வின், கடந்த மூன்று வருடங்களாக ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடவில்லை. கடைசியாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2017-ல் ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடினார். எனினும் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த வருடம் டெல்லி அணிக்காக விளையாடிய அஸ்வின், 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது குறித்து பேசியுள்ள முகமது கைஃப் " கோலி, பொல்லார்ட், கெய்ல், வார்னர், டி காக், கருண், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரான் என ஐபிஎல் போட்டியில் பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்துள்ளார். பெரும்பாலான விக்கெட்டுகளை பவர்பிளே பகுதியில் எடுத்துள்ளார். இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக அஸ்வின் இருப்பார் எனத் தோன்றுகிறது. எனவே அவரை அணியில் சேர்த்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com