ஸ்மித்க்கு எதிராக விளையாடும் அணிகளுக்கு அஸ்வின் அட்வைஸ்

ஸ்மித்க்கு எதிராக விளையாடும் அணிகளுக்கு அஸ்வின் அட்வைஸ்

ஸ்மித்க்கு எதிராக விளையாடும் அணிகளுக்கு அஸ்வின் அட்வைஸ்
Published on

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை, இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மனதார பாராட்டி ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் துறையைப் பொருத்தவரையில் வீரர்கள் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்களை அனைத்து நாட்டு வீரர்களும் பாராட்டி பேசுவது வழக்கம். குறிப்பாக விராட் கோலி, தோனி போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங், பவுலிங் என பல்வேறு திறமைகளை பார்த்து வியந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் இணைந்துள்ளார். அவர், ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு புகழாரம் சூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான ஆஷஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஸ்மித் 491 ரன்களை குவித்து அசத்தி வருகிறார். ஸ்மித்தின் அசாத்தியமான பேட்டிங் திறமையை பல வீரர்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அஸ்வின் இணைந்துள்ளார்.

ஸ்மித்தின் ரன் குவிப்பை பாராட்டும் விதமாக, அவருக்கு எதிராக களமிறங்கும் அணிகளுக்கு அஸ்வின் நகைச்சுவையுடன் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். அஸ்வின் தனது ட்விட்டரில் பதிவில், “ஒரு டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அணிகள் ஸ்மித்துடன் அமர்ந்து பேச வேண்டும். அப்போது அவர் இவ்வளவு ரன்கள்தான் அடிக்க வேண்டும் என்பதை இருதரப்பும் பேசி ஒத்துக்கொள்ள வேண்டும். என்னவொரு வெறித்தனமான ஆற்றல்” என்று தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பதிவிட்டுள்ள இந்த ட்விட்டில் அவர், ஸ்மித்தின் பேட்டிங்கை கண்டு வியந்துள்ளது தெரிகிறது. இதற்கு பயப்பட வேண்டாம் என்று சில ரசிகர்கள் அஸ்வினுக்கு பதில் கமண்ட் செய்துள்ளனர். வழக்கம் போல் ஸ்மித்தையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பலர் கருத்துக்களை கருத்து பதிவிட்டிருந்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com