’அஸ்வின் ஸ்மார்ட்டான கிரிக்கெட்டர்’: முரளீதரன் புகழாரம்

’அஸ்வின் ஸ்மார்ட்டான கிரிக்கெட்டர்’: முரளீதரன் புகழாரம்

’அஸ்வின் ஸ்மார்ட்டான கிரிக்கெட்டர்’: முரளீதரன் புகழாரம்
Published on

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் புத்திசாலித்தனம் மிக்க கிரிக்கெட் வீரர் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன் புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுதொடர்பாக பேசிய முரளீதரன், சமீபகாலங்களில் அஸ்வின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். அவரது திறமை ஒவ்வொரு போட்டியின்போதும் மெருகேறி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். அவரது விளையாட்டைப் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். ஐபிஎல் பாணியில் தொடங்கப்பட்டுள்ள டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்கும் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் பயிற்சியாளராக முரளீதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணியின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து பேசிய முரளீதரன், இளம் வீரர்களுடன் முற்றிலும் புதிய அணியாக உருவாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஒரு அணியாக செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com