டிராவிட்டுக்கு எதற்கு அடிக்கடி ஓய்வு? -ரவி சாஸ்திரியின் விமர்சனத்திற்கு பதிலளித்த அஸ்வின்

டிராவிட்டுக்கு எதற்கு அடிக்கடி ஓய்வு? -ரவி சாஸ்திரியின் விமர்சனத்திற்கு பதிலளித்த அஸ்வின்
டிராவிட்டுக்கு எதற்கு அடிக்கடி ஓய்வு? -ரவி சாஸ்திரியின் விமர்சனத்திற்கு பதிலளித்த அஸ்வின்

தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியல்ல என ரவி சாஸ்திரி விமர்சித்திருந்த நிலையில், டிராவிட்டுக்கு ஆதரவாக பேசியுள்ளார் அஸ்வின்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியல்ல என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்தார். இதுகுறித்து ரவி சாஸ்திரி மேலும் கூறுகையில், ''எனக்கு ஓய்வுகளில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். உண்மையைச் சொல்வதென்றால் உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகளுக்கு என்ன தேவை? ஐபிஎல் தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வு உங்களுக்கு போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் தனது அணியுடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்'' என்று கூறினார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ரவி சாஸ்திரியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அஸ்வின், ''டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அவரது குழுவினர் கடினமாக உழைத்தனர். இதை அருகிலிருந்து பார்த்தவன் நான். அவர்கள் ஒவ்வொரு மைதானத்திற்கும், ஒவ்வொரு அணிக்கும் தகுந்தாற்போல் விரிவான திட்டங்களை தயார் செய்தார்கள். அதனால் அவர்கள் மனதளவில் மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் சோர்வாக இருந்திருப்பார்கள். அனைவருக்கும் ஓய்வு என்பது அவசியம் தேவை. நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் நாங்கள் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். அதனால்தான் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று கூறினார்.  

இதையும் படிக்கலாமே: கிரிக்கெட் இல்லனா என்ன? வாங்க 'ஃபுட்பால்' விளையாடலாம்: இந்தியா-நியூசிலாந்து வீரர்கள் ஜாலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com