இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா வர்ணனையாளராக புது அவதாரம் எடுக்கிறார்.
ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணியுடனான டி20 போட்டியுடன் அவர் சர்வதேச டெஸ்ட்டில் இருந்து விடைபெற்றார். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பின்னர் அந்த துறை சார்ந்த எதாவது ஒரு பணியில் ஈடுபடுவார்கள். ராகுல் டிராவிட், கங்குலி, ரவிசாஸ்திரி போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் போன்ற பணிகளில் பொரும்பாலும் ஈடுபடுவார்கள். நெஹ்ரா ஓய்வுக்கு பிறகு என்ன செய்யப்போகிறேன் என இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். பெரும்பாலானோர் அவர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக முடிவு செயவார் என எண்ணினர். ஏனெனில் இடக்கை வேகப்பந்துவீச்சாளரான அவர் போட்டியின் போது இளம்வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவார். வீரர்கள் மத்தியில் எந்தவித பாகுபாடும் இன்றி சகஜமான பழகும் சுபாவம் கொண்டவர்.
இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா வர்ணனையாளராக களமிறங்கவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரவி சாஸ்திரி, கவாஸ்கர், ஷேன் வார்னே, விவிஎஸ் லட்சுமணன், சச்சின், கங்குலி எனப் பலரும் வர்ணனையாளராக இருந்துள்ளனர். களத்தில் தனக்கு பிடித்த வீரர் விளையாடுவதைப் போன்றே போட்டியின்போது அவர்கள் செய்யும் வர்ணனையையும் ரசிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.