“தோனி அவரது கடைசி போட்டியை இந்தியாவுக்காக ஆடிவிட்டார்” - நெக்ரா

“தோனி அவரது கடைசி போட்டியை இந்தியாவுக்காக ஆடிவிட்டார்” - நெக்ரா

“தோனி அவரது கடைசி போட்டியை இந்தியாவுக்காக ஆடிவிட்டார்” - நெக்ரா
Published on

தோனி தனது கடைசி போட்டியை இந்தியாவுக்காக ஏற்கெனவே ஆடிவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசிஷ் நெக்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அறிவிப்புகள் மீண்டும் சூடு பிடித்திருக்கும் நிலையில், தோனி தொடர்பான பேச்சுகளும் மீண்டும் எழுந்துள்ளன. இந்திய அணிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகக் கோப்பையில் விளையாடிய தோனி, அதன்பின்னர் மீண்டும் இதுவரை இந்திய அணியில் விளையாடவில்லை. அத்துடன் தான் ஓய்வு பெற்றதாகவும் தோனி அறிவிக்கவில்லை. இதனால் அவர் இனிமேல் இந்திய அணிக்காக விளையாடுவாரா ? மாட்டாரா ? என்ற பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவதை பொறுத்து இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் ‘கிரிக்கெட் கனெக்டெட்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நெக்ரா, தோனியை எந்த அளவிற்கு தனக்கு தெரியுமா, அந்த அளவிற்கு அவர் இந்தியாவுக்கான கடைசி போட்டியை மகிழ்ச்சியாக விளையாடிவிட்டார் என்றும் தெரியும் எனக் கூறியுள்ளார். தோனி நம்மிடமும், ஊடகங்களிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்றும், அவர் ஓய்வு குறித்து இன்னும் அறிவிக்காததே இந்த விவாதங்களுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தோனியின் மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய நெக்ரா, “தோனியின் சர்வதேச கிரிக்கெட்டில், ஐபிஎல் போட்டி என்பது எதையும் மாற்றிவிடாது என நான் நினைக்கிறேன். ஒரு கேப்டனாகவோ அல்லது தேர்வாளராகவோ அல்லது பயிற்சியாளராகவோ நான் இருந்தால், எனது அணியில் கண்டிப்பாக தோனியும் ஒருவராக இருப்பார். என்னைப் பொறுத்தவரை தோனியின் திறமை இன்னும் சற்றும் குறையவில்லை. அவர் உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் அவுட் ஆவதற்கு முன்பு வரை அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் ரன் அவுட் ஆனவுடன் அனைவரது நம்பிக்கை போய்விட்டது. இதுவே தோனியின் ஆட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com