இந்திய கிரிக்கெட்டின் "மேட்ச் வின்னர்" யார் தெரியுமா ? நெஹ்ராவின் பதில்

இந்திய கிரிக்கெட்டின் "மேட்ச் வின்னர்" யார் தெரியுமா ? நெஹ்ராவின் பதில்
இந்திய கிரிக்கெட்டின் "மேட்ச் வின்னர்" யார் தெரியுமா ? நெஹ்ராவின் பதில்

இந்தியாவின் தலைச்சிறந்த மேட்ச் வின்னர் சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேதான் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் "கிரிக்கெட் கணெக்டட்" நிகழ்ச்சியில் பேசிய ஆசிஷ் நெஹ்ரா "அனில் கும்ப்ளேவை முதல் முறையாக தொலைக்காட்சியில் இந்தியாவுக்காக விளையாடும்போதுதான் பார்த்தேன். அப்போது அவர் பெரிய கண்ணாடியை அணிந்திருந்தார்." என்றார்.

மேலும் பேசிய நெஹ்ரா "பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்றால் என்னைப் பொருத்தவரை அது அனில் கும்ப்ளேதான். அதில் எந்தெவாரு சந்தேகமும் இல்லை" என தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 619 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அனில் கும்ப்ளே. அதேபோல 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்யில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுத்து கும்ப்ளே அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com