ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். 5 போட்டிகள் கொண்ட தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. கடந்த முறை இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆயத்தமாகி வருகிறது.
முதல் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் நடைப்பெற உள்ளது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.