ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்
புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தசைப்பிடிப்பு காரணமாக களமிறங்க மாட்டார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆண்டர்சனுக்கு சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் 2ஆவது டெஸ்டுக்கு தயாராகவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இத்தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியாவும் ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்தும் விளையாட உள்ளன. தற்போது ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது