ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 144 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 374 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 133 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 50 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காவது நாளான நேற்று அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் அபார சதம் அடித்தார். அவர் 142 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆஷஸ் தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 5-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேத்யூ வேட் 110 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 13 ரன்கள் எடுத்தது. 5ஆம் நாளான இன்று இங்கிலாந்து அணி சற்று தடுமாறியது. ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரும் தலா 28 ரன்கள் எடுத்தனர். அதற்கு பின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆயினர். இறுதியாக கிறிஸ் வோக்ஸ் மட்டும் சற்றும் பொறுப்புடன் விளையாடி 37 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com