ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..!
ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் செளரப் சவுத்ரி தங்கப் பதக்கமும், அபிஷேக் வர்மா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இளம் வீராங்கனை வினேஷ் போகத் இந்தப் பெருமையை தேசத்திற்கு தேடித்தந்தார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை யூகி இரியை எதிர்த்து விளையாடினார். இதில் ஜப்பான் வீராங்கனையின் சவாலை முறியடித்து வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.
Also Read -> ’அஸ்வினின் முக்கியத்துவம் இப்போது தெரியும்’
Read Also -> விராத் சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி!
இந்நிலையில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் செளரப் சவுத்ரி தங்கப் பதக்கமும், அபிஷேக் வர்மா வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஆசிய விளையாட்டு போட்டிக்கான பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 7 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் உள்ளது. இதில் 3 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.