
பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலை வகித்துள்ளது அங்கு. அந்தக் கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவரைப்போல நாட்டின் தலைமை இடத்துக்கு வந்த மற்ற விளையாட்டுக்கள் யார் யார்?
நவாஸ் ஷெரீப்:
இப்போது சிறையில் இருக்கும் ஷெரீப்பும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். கிளப் கிரிக்கெட் வீரரான இவர், ஒரே ஒரு முதல் தர போட்டியில் விளையாடி இருக்கிறார். அந்தப் போட்டியிலும் டக் அவுட். பிறகு கிரிக்கெட்டை கைகழுவிவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார்.
ஜார்ஜ் லோஹ்:
லிபேரியாவில் முன்னாள் தலைவர். இவர் கால்பந்துவீரர். முக்கிய கால்பந்து கிளப் அணிகளுக்காக விளையாடி, புகழ்பெற்றவர்.
இடி அமின்:
உகாண்டாவின் சர்வாதிகாரியான இடி அமின், பாக்ஸர். 1951-ல் இருந்து 1060 ஆம் ஆண்டு வரை சாம்பியன் பட்டம் பெற்ற இவர், சிறந்த நீச்சல் வீரர். ரக்பியும் விளையாடி இருக்கிறார்.
இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் :
மொனாக்கோ நாட்டின் இரண்டாம் இளவரசர் ஆல்பர்ட் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். 1988- 2002 வரை பங்கேற்றுள்ளார்.
சர் அலெக் டக்ளஸ்:
கிரிக்கெட் விளையாடிய ஒரே பிரிட்டீஷ் பிரதமர் இவர்தான். தனது 92 வயதில் உயிரிழந்துவிட்ட டக்ளஸ் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி, 16.33 ஆவரேஜ் வைத்துள்ளார். பந்துவீச்சில் 30.25 சராசரி வைத்துள்ளார்.
விக்டர் ஆர்பன்:
ஹங்கேரியின் பிரதமரான இவர் கால்பந்துவீரர்.