"முதல்ல நானே பெரிய ரசிகன்"- தோனி குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் !

"முதல்ல நானே பெரிய ரசிகன்"- தோனி குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் !
"முதல்ல நானே பெரிய ரசிகன்"- தோனி குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் !

மற்றவர்களைவிட நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு பேட்டியளித்துள்ள எம்.எஸ்.கே.பிரசாத் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் தோனியின் ஓய்வு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அது குறித்து பேசிய அவர் "ஓய்வோ தொடர்ந்து விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும். தேர்வுக் குழு உறுப்பினர் என்ற வேலைக்கு அப்பாற்பட்டு சொல்ல வேண்டும் என்றால் எல்லோரையும்விட நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு கேப்டனாக அனைத்து சாதனைகளையும் செய்துவிட்டார். இரண்டு உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை, இந்தியாவை டெஸ்ட் ரேங்கில் முதலிடத்திற்கு கொண்டு வந்தது, இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாது" என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத் "அவருடைய முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். தேர்வுக் குழுவினராக நாங்கள் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதைதான் நாங்கள் இப்போது செய்துகொண்டு இருக்கிறோம்".

ரோகித் சர்மா குறித்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத் " ரோகித் இப்போது டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டி என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரராக உருவாகியிருக்கிறார். அவர் இப்படி ஒரு அசாதாரண வீரராக உருவாகியிருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த இரட்டை சதம் அவருடைய திறமைக்கு ஒரு சான்று. அவர் தன்னுடைய இந்த பேட்டிங் திறனை தொடர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த எம்.எஸ்.கே.பிரசாத் " டெஸ்ட் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரியும், ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் அணியில் நீடிப்பார்கள். இப்போது ஸ்ரேயாஸ் மிக நன்றாக விளையாடி வருகிறார். பந்து வீச்சில் காயத்திற்கு பின்பு பும்ரா கடுமையான பயிற்சி மேற்கொண்டார். அவரின் திறன் அப்படியேதான் இருக்கிறது. இதில் சந்தேகமே வேண்டாம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com