#INDvsNZ ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகும் அர்ஸ்தீப், உம்ரான் மாலிக் - கில், தவான் அரைசதம்!

#INDvsNZ ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகும் அர்ஸ்தீப், உம்ரான் மாலிக் - கில், தவான் அரைசதம்!

#INDvsNZ ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகும் அர்ஸ்தீப், உம்ரான் மாலிக் - கில், தவான் அரைசதம்!
Published on

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி இன்று காலை  7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகின்றனர். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் நல்ல துவக்கத்தை தந்துள்ளனர். ஷிகர் தவான் 72 ரன்களும்,  சுப்மன் கில் 50 ரன்களும் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தனர். தற்போது களத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பண்டும் உள்ளனர்.

இந்திய அணியின் ப்ளேயிங் 11: ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com