இங்கி. பேட்ஸ்மேனைத் திணறடித்த ஜூனியர் டெண்டுல்கர்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய யார்க்கர் பந்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேரிஸ்டோவ் நிலைகுலைந்தார்.
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். வலை பயிற்சியின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசினார். அர்ஜூனின் யார்க்கர் பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேரிஸ்டோவின் இடது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு ஜானி பேரிஸ்டோவ் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், காயம் பெரிய அளவுக்கு இல்லை என்பது ஸ்கேன் செய்த பின்னர் தெரியவந்தது. 17 வயதான அர்ஜூன் டெண்டுல்கர், இங்கிலாந்து வீரர்களுடன் அவ்வப்போது பயிற்சி மேற்கொள்வதுண்டு. சச்சினைப் போல் பேட்ஸ்மேனாக அல்லாமல் இடது கை வேகப்பந்துவீச்சில் ஜூனியர் டெண்டுல்கர் கலக்கி வருகிறார்.