5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்

5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்

5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்
Published on

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினின் மகன் அர்ஜுன் தனது ஆசாத்திய பவுலிங் திறமையால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை திகைக்க வைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் உலக அளவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்துக் கொண்டு மிகப்பெரிய சாதனைகளை படைத்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் தற்போது தீவிரமாக கிரிக்கெட் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறார். தனது தந்தைக்கு உள்ள புகழின் காரணமாகவே கிரிக்கெட்டில் அர்ஜூனுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. இதை உணர்ந்த அர்ஜூன் முடிந்தவரை போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மும்பையில் ‘கூச் பெஹார் டிராபி’ கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோர் ரஞ்சி போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த 5 நாட்களாக இந்த தொடரில் மத்தியப் பிரதேச அணிக்கும், மும்பை அணிக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் மும்பை அணியில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் தனது ஆசாத்தியமான பந்து வீச்சால் மத்தியப் பிரதேச அணியின் வீரர்களை வரிசையாக அவுட் செய்தார். தொடர்ந்து 5 வீக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஜுன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இறுதியில் முதல் இன்னிங்சில் மத்தியப் பிரதேச அணி 361 ரன்கள் எடுத்து சுருண்டது. அதன் பின்பு ஆடிய மும்பை அணி 506 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் சிறந்த பவுலிங் திறமையை வெளிப்படுத்திய அர்ஜுனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இவர் இந்திய அணியில் இருக்கும் முன்னணி வீரர்களுக்கு பயிற்சியின்போது பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com