என்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்

என்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்
என்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்

தனது மகனுக்கும் மகளுக்கும் ட்விட்டர் பக்கத்தில் கணக்குகள் இல்லை என்று  இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அத்துடன் மும்பை அணியின் 19 வயது மற்றும் 21 வயது ஆகிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 19வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் இந்திய அணி சார்பில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கினார். 

தனது தந்தையை போல அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட் களத்தில் சாதிக்க துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அர்ஜூன் டெண்டுல்கரின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கிலிருந்து சில சர்ச்சைக்குரிய பதிவுகள் ஈடப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து தற்போது சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய மகனுக்கும், மகளுக்கும் ட்விட்டரில் கணக்குகள் இல்லை. தற்போது ட்விட்டரில் அர்ஜூன் டெண்டுல்கர் என்று இருக்கும் கணக்கு போலியானது. இந்தக் கணக்கிலிருந்து பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றது. ஆகவே இந்தக் கணக்கை உடனடியாக நீக்குமாறு ட்விட்டர் இந்தியாவை நான் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com