கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது அர்ஜென்டினா
கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் டி மரியா கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com