\
கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம்!

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம்!

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம்!
Published on: 

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டீகோ மாரடோனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுபது வயதான மாரடோனா அவரது வீட்டில் இருந்த போது உயிரிழந்தார். அர்ஜென்டினா அணிக்காக கடந்த 1986 இல் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் மாரடோனா. நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை  பீலேவுடன் பகிர்ந்து கொண்டவர் மாரடோனா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சையான ‘கடவுளின் கை’ என்ற கோல் பரவலாக அறியப்படுகிறது. கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாரடோனா தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com