\
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: அர்ஜென்டினா - பெரு பலப்பரீட்சை

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: அர்ஜென்டினா - பெரு பலப்பரீட்சை

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: அர்ஜென்டினா - பெரு பலப்பரீட்சை
Published on: 

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில், நாளை மறுதினம் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பெரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இரு அணிகளுக்கும் இருக்கிறது. தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. தற்போது பெரு அணி நான்காவது இடத்திலும், அர்ஜென்டினா அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com