'நாங்கள் என்ன இந்தியாவின் வேலையாட்களா?' - ரமீஸ் ராஜா விரக்தி பேச்சு

'நாங்கள் என்ன இந்தியாவின் வேலையாட்களா?' - ரமீஸ் ராஜா விரக்தி பேச்சு
'நாங்கள் என்ன இந்தியாவின் வேலையாட்களா?' -  ரமீஸ் ராஜா விரக்தி பேச்சு

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்நிலையில், பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதை ஜீரணிக்க முடியாமல் இந்திய அணியின் தேர்வுக்குழுவை பிசிசிஐ கலைத்ததாக ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0–3 என முழுமையாக இழந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்த முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நீக்கப்பட்டார். இவருக்குப்பதில், 14 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டு, தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதை ஜீரணிக்க முடியாமல் இந்திய அணியின் தேர்வுக்குழுவை பிசிசிஐ கலைத்ததாக ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ரமீஸ் ராஜா, ''கிரிக்கெட் போர்டு தலைவராக நான் இருந்தபோது, பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. சமீபத்திய, ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால், பணக்கார அணியான இந்தியாவால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. 2021ல் நடந்த டி20 உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி வெற்றியை இழந்தது.

இப்படி பாகிஸ்தான் முன்னேறி சென்றதை பி.சி.சி.ஐ.யால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பின், இந்திய அணி தேர்வுக்குழு மாற்றம், கேப்டன் விராட் கோலி நீக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டன. கிரிக்கெட்டில் உலக வல்லரசாக இருப்பதாலேயே நாம் என்ன இந்தியாவின் வேலையாட்களா? அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் கேட்க வேண்டுமா? எங்கள் அணி கேப்டன் பாபர் ஆசமுக்கு முழு உரிமை தந்திருந்தேன். ஒட்டுமொத்தமாக, எனது நிர்வாகத்தின்போது பாகிஸ்தான் அணியை உலக தரத்திற்கு கொண்டு சென்றேன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நமக்கு நல்ல ரசிகர்கள் உள்ளனர்; சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். எனவே நமது அணிக்கும் ரசிகர்களுக்கும் உரிய மரியாதையை கொடுங்கள்" என்று கூறினார்.

முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் நஜாம் சேத்தி பேட்டி ஒன்றில் கூறுகையில், ''அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணியை அனுப்புவது குறித்து அரசு மட்டத்தில் முடிவு செய்யப்படும்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com