விளையாட்டு
ஒலிபெருக்கிக்கு அனுமதி கேட்டு லக்னோவில் வரிசை!
ஒலிபெருக்கிக்கு அனுமதி கேட்டு லக்னோவில் வரிசை!
உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கு அனுமதி பெற விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சியில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அம்மாநில நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தலைநகர் லக்னோவில் இம்மாதம் ஒலிபெருக்கு பயன்படுத்த 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. திருமண அழைப்பிதழ், இசைக் குழுவின் தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்ய மணமக்களின் குடும்பத்தினர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அனுமதி கிடைக்க ஒருவார காலம் ஆவதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக மணமக்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.