\
“யார் இந்தக் கல்யாண மாப்பிள்ளை?” - ஹர்பஜன் சிங் போட்ட புதிர்

“யார் இந்தக் கல்யாண மாப்பிள்ளை?” - ஹர்பஜன் சிங் போட்ட புதிர்

“யார் இந்தக் கல்யாண மாப்பிள்ளை?” - ஹர்பஜன் சிங் போட்ட புதிர்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒருவர் திருமணம் செய்துகொண்டதாகவும், அது யார் ? எனவும் ஹர்பஜன் சிங் புதிர் போட்டுள்ளார்.

ஐபிஎல் வரும் 23ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. கிரிக்கெட் ரசிகர்கள் 23ஆம் தேதி எப்போது வரும்? என ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

சென்னை அணியில் உள்ள வீரர்களில் ஹர்பஜன் சிங் தமிழ் நெட்டிசன்களுக்கு கொஞ்சம் பிரியமானவராகிவிட்டார். ஏற்கனவே அவரது தமிழ் ட்விட்டுகளால், அவரை தமிழ்ப் புலவர், கவிஞர் என்றெல்லாம் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்விக்க பல குறும்புத் தனங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில், முகம் முழுவதும் பூக்களால் மறைக்கப்பட்ட ஒரு சென்னை அணி வீரரின் புகைப்படத்தை ஹர்பஜன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ‘சென்னை அணியில் திருமணம் செய்துள்ள இவர் யார் எனக் கண்டுபிடியுங்கள்?” என்றும் புதிர் போட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரின் தலையை பார்க்கும்போது, வடிவேலுவின் காமெடி வசனம் ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. ‘எல்லாத்தையும் மாற்றினோம்.. ஆனா மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டோமே” என்பது போல, அந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரின் தலையை பார்க்கும்போதே அது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ‘டிஜே ப்ரவோ’-ன் தலை என்பது தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com