கேப்டன் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் ஷிகார் தவான் மனைவி ஆயிசா ஆகியோர் தென்னாப்பிரிக்காவில் விடுமுறையை கழிக்கும் புகைபடங்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில், சில வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளனர். புதுமண தம்பதிகளான விராத் - அனுஷ்கா இருவரும் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். கேப் டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சரியாக ஆடவில்லை என்றும், அவர் மனைவி அனுஷ்காவுடன் விடுமுறையை கழிப்பதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள், அவர்களை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கோலியின் ஆட்டத்தை நேரில் காண அனுஷ்கா அரங்கத்திற்கு சென்றிருந்தார். இதனையும் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்கள் போட்டு சமூகவலைத்தளங்களில் பரப்பினர். இதனைத்தொடர்ந்து. தற்போது அனுஷ்கா சர்மா தனக்கும், தனது மகளுக்கும் ஜிம் ட்ரெய்னராக மாறியதாக ஷிகார் தவான் மனைவி ஆயிசா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து ஜிம்மில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும், தென்னாப்பிரிக்கா முழுவதும், கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் இணைந்து ஊரைச் சுற்றிப் பார்த்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை வைத்து, கிரிக்கெட் ரசிகர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அனுஷ்கா சர்மா, கேப் டவுனிலிருந்து புறப்பட்டு மும்பை வந்தடைந்தார்.