கோலியை தேடி அனுஷ்கா ரகசிய விசிட்!

கோலியை தேடி அனுஷ்கா ரகசிய விசிட்!
கோலியை தேடி அனுஷ்கா ரகசிய விசிட்!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியை சந்திப்பதற்காக, அவர் காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ரகசியமாக இலங்கை சென்றுள்ளதாக மும்பை சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், 5 ஒரு நாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. ஒரு நாள் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தங்கள் மனைவியுடன் இலங்கை சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர். அஸ்வின் மனைவி பிரீத்தி, உமேஷ் யாதவ் மனைவி தன்யா, சாஹா மனைவி ரோமி, இஷாந்த் சர்மா மனைவி பிரதிமா சிங் ஆகியோர் இந்தியா வந்துவிட்டனர்.

இந்நிலையில் விராத் கோலியை சந்திக்க அனுஷ்கா சர்மா நேற்று இலங்கை சென்றுள்ளார். மீடியா கண்களில் படமால் இருக்க, அவரது பயணத் திட்டமும் அவர் தங்கி இருக்கும் ஓட்டல் விவரமும் ரசிகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக மும்பை சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com