வெற்றியை மனைவியின் பிறந்த நாளுக்காக பரிசளித்த விராட் கோலி

வெற்றியை மனைவியின் பிறந்த நாளுக்காக பரிசளித்த விராட் கோலி
வெற்றியை மனைவியின் பிறந்த நாளுக்காக பரிசளித்த விராட் கோலி

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக அளிப்பதாக விரோட் கோலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பெங்களூரு அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில் மும்பை அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி விழ்த்தியது. பெங்களூரு அணியின் கேப்டன் விரோட் கோலி 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். வெற்றிக்கு பின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிறந்த நாளை மகிழ்சியுடன் கொண்டாடினார் விராட் கோலி. இந்த புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் “உலகிலேயே மிகச் சிறந்த, தைரியமான, கருணையுள்ள நபருடன் சிறந்த பிறந்தநாள் இது” என கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த 7 போட்டிகளை பெங்களூரு அணி எதிர்கொண்டிருந்த நிலையில் அவற்றில் இரண்டில் மட்டும்தான் வெற்றி கண்டிருந்தது. இதனையடுத்து எட்டாவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி நிலை பெங்களூரு அணியின் கேப்டன் விரோட் கோலிக்கு இருந்தது. இந்நிலையில் மனைவியின் பிறந்தநாளில் விராட் வெற்றி கண்டிருக்கிறார். போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி இந்த வெற்றியை தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக அளிப்பதாக கூறியுள்ளார். “ என் மனைவி இங்குதான் இருக்கிறார். இன்று அவரின் பிறந்தநாள். இந்த வெற்றி அவருக்கு என்னுடைய சிறிய பிறந்தநாள் பரிசு..” என விராட் கூறினார்.

மனைவியுடன் விரோட் கோலி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com