கேப் டவுன் வீதியில் டான்ஸ் ஆடிய அனுஷ்கா சர்மா
தென்னாப்பிரிக்காவில் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கேப் டவுனில் நடைபெற்று வருகின்றது. 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 185 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 286 ரன்களை பெற்றிருந்தது. கேப் டவுனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் மற்றும் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் நேரில் சென்று போட்டியை கண்டு களித்தனர்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கேப் டவுனின் கடை வீதியில் உற்சாகத்துடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மிகுந்த சந்தோஷத்துடன் நண்பர் ஒருவருடன் அனுஷ்கா நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் இதே கேப் டவுனிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட விராட் கோலியும், ஷிகர் தவானும் கடை வீதியில் நடனமாடிய வீடியோ வைரல் ஆனது. அதனைத் தொடர்ந்து அனுஷ்கா சர்மாவும் கேப் டவுன் வீதியில் நடனமாடியுள்ளார்.