மளிகை கடையில் அனுஷ்காவுடன் கோலி: வைரலாகும் படம்!
அமெரிக்காவில் மளிகை கடையில் கோலியும் அனுஷ்கா சர்மாவும் நிற்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை முடித்த பின், வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியது. பின்னர் சில வீரர்கள் அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் அங்கு விடுமுறையை கொண்டாடி வருகிறார். ஐஃபா விருது விழாவுக்காக அமெரிக்கா சென்றுள்ள கோலியின் காதலி, அனுஷ்கா சர்மாவும் அவருடன் இணைந்துள்ளார். இருவரும் அங்கு பல்வேறு பகுதிகளில் ஜாலியாக சுற்றி வருகின்றனர். அந்த புகைப்படங்களை அவர்களே டிவிட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கோலியும் அனுஷ்காவும் நியூயார்க்கில் மளிகை கடை ஒன்றில் இருக்கும் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.