இன்னொரு இந்தியர் சாம்பியனாவார்: விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை

இன்னொரு இந்தியர் சாம்பியனாவார்: விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை

இன்னொரு இந்தியர் சாம்பியனாவார்: விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை
Published on

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மற்றொரு இந்தியர் சாம்பியனாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரியில் நடந்த செஸ் போட்டிக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த், பள்ளி மாணவர்களுக்கு போட்டியின் நுணுக்கங்கள் குறித்தும், போட்டிக்கு தயாராவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது‌ மகிழ்ச்சி அளிப்பதாகவும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மற்றொரு இந்தியர் சாம்பியனாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்தார். செஸ் போட்டியில் நடப்பு உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்துவேன் என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com