\
கும்ப்ளே அப்படிப்பட்டவரா? மறுக்கிறார் சஹா!

கும்ப்ளே அப்படிப்பட்டவரா? மறுக்கிறார் சஹா!

கும்ப்ளே அப்படிப்பட்டவரா? மறுக்கிறார் சஹா!
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி பெரிய ஸ்கோரை எட்டவேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே விரும்புவார் என்று இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கூறினார்.

இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வென்ற பின், தனது சொந்த ஊரான கொல்கத்தாவுக்குத் திரும்பியுள்ள சஹா, மேலும் கூறும்போது, ‘முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, பயிற்சியாளராக சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டி இருந்தது. இதை சில வீரர்கள், அவர் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார் என்று நினைத்தனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றியதே இல்லை. இந்திய அணி 400, 500, 600 என பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். இதே போல் எதிரணியை 150-ல் இருந்து 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்று நினைப்பார். ஆனால் இவை எப்போதும் நடக்கக்கூடியது அல்ல’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com