ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக கும்ப்ளே தேர்வு

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக கும்ப்ளே தேர்வு

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக கும்ப்ளே தேர்வு
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது குறித்தும் பேசப்பட்டது. இந்த விவகாரத்தை இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ராகுல் ஜோரி கொண்டு வந்தார். அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ரசிகர்களின் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஐசிசியின் சிஇஓ ரிச்சர்ட்சன் தெரிவித்தார். 

பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாட்டை, கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற பேச்சு, இக் கூட்டத்தில் எழுப்பப்பட வில்லை என்று கூறப்படுகிறது. 

பின்னர், ஐசிசி-யின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் 3 வருடம் இந்தப் பதவியில் நீடிப்பார். இந்த பதவிக்கு முதன்முறையாக கடந்த 2012-ம் ஆண்டு தேர்வாகியிருந்தார் கும்ப்ளே. தற்போது 3-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com