இதுக்கு பேருதான் பதுங்கி பாய்தல்: வெயிட் பண்ணி வீழ்த்திய, டை!

இதுக்கு பேருதான் பதுங்கி பாய்தல்: வெயிட் பண்ணி வீழ்த்திய, டை!

இதுக்கு பேருதான் பதுங்கி பாய்தல்: வெயிட் பண்ணி வீழ்த்திய, டை!

ஐபிஎல் போட்டியில் ஐந்து விக்கெட் எடுத்து சாதனை படைத்த புனே வீரர் ஆண்ட்ரூ டை, 34 போட்டிகள் காத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

புனே, குஜராத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், குஜராத் அணியின் ஆண்ட்ரூ டை (ஆஸ்திரேலியா) ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். கடைசி ஓவரில் பந்து வீசிய அவர், அங்கித் ஷர்மா, மனோஜ் திவாரி, தாகூர் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி இந்தச் சாதனையைப் படைத்தார். அவர் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி, 17 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுபற்றி ஆண்ட்ரு டை கூறும்போது, ‘நான் சென்னை கிங்ஸ் அணியில் இருந்தேன். அந்த அணிக்கு தடை விதித்ததால் குஜராத் அணிக்கு வந்தேன். என்னை போட்டியில் பயன்படுத்தவில்லை. கடந்த 34 ஐபிஎல் போட்டிகளில் எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். வாய்ப்புக் கிடைத்ததும் பயன்படுத்தி விக்கெட் எடுத்தேன்’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com