தொடைக்கு அருகே பதம் பார்த்த டை வீசிய பந்து.. தரையில் அமர்ந்து வலியால் துடித்த பிரித்வி ஷா!

தொடைக்கு அருகே பதம் பார்த்த டை வீசிய பந்து.. தரையில் அமர்ந்து வலியால் துடித்த பிரித்வி ஷா!
தொடைக்கு அருகே பதம் பார்த்த டை வீசிய பந்து.. தரையில் அமர்ந்து வலியால் துடித்த பிரித்வி ஷா!

லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஆண்ட்ரூ டை வீசிய பந்து டெல்லி அணியின் ஓப்பனர் பிருத்வி ஷா தொடைக்கு அருகே பதம் பார்த்ததால், அவர் வலியால் துடித்து கீழே அமர்ந்ததால் சலசலப்பு ஏற்பட்டது!

இன்றைய ஐபிஎல் போட்டியில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங்கைத் தேர்வு செய்தார். டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். துவக்கம் முதலே அட்டாகிங் ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார் பிருத்வி ஷா. கிருஷ்ணப்பா கவுதம் முதல் ஆண்ட்ரூ டை வரை அனைவர் வீசிய பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு விரட்டினார் பிருத்வி ஷா.

முதல் ஓவர் தவிர்த்து அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசிக் கொண்டிருந்தார் பிருத்வி ஷா. இந்நிலையில் ஆறாவது ஓவரை வீச ஆண்ட்ரூ டை வந்தார். முதல் இரு பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார் பிருத்வி ஷா. ஆண்ட்ரூ டை மூன்றாவது பந்தை ஷார்ட் பாலாக வீச, அதை பிருத்வி ஷா மிஸ் செய்தார். அதிவேகத்தில் ஸ்விங் ஆன பந்து, ஷாவின் தொடையருகே பலமாக மோதியது. நிலைகுலைந்த பிருத்வி ஷா இரு கைகளையும் தரையில் ஊன்றி அமர்ந்தார். உடனடியாக பிசியோதெரபிஸ்ட் அவரை பார்வையிட்டு சோதித்தார். நீண்ட சுவாசங்களை அவர் மேற்கொள்ளச் சொல்ல, சில வினாடிகளில் பேட்டிங் செய்ய எழுந்து நின்றார் ஷா!

அடுத்து டை வீசிய ஓவரின் 4வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தான் நலமாக இருப்பதாக “பேட்” மூலம் பதிலளித்து விட்டர் பிருத்வி ஷா. இதையடுத்து இன்னும் அதிரடி காட்டிய ஷா, 30 பந்துகளில் அரைசதம் கண்டார். கிருஷ்ணப்பா கவுதம் வீசிய ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய நிலையில், டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 34 பந்துகளை சந்தித்த பிருத்வி ஷா 9 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 64 ரன்கள் குவித்தார்.

பொறுமையாக விளையாடிய வார்னரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாவை பின் தொடர்ந்து வெளியேறினார். 13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. பிரித்வி ஷாவை தவிர மற்ற அனைவரும் மிகவும் பொறுமையாக விளையாடினர். ரிஷப் பண்ட் சந்தித்த 12வது ஓவர் மெயிடன் ஆனது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com