“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர் 

“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர் 
“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர் 

பி.வி.சிந்து ஒரு சாம்பியன் வீராங்கனை என்று பாராட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்தின் பாசில் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்த்து பி.வி.சிந்து களம் கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பி.வி.சிந்து ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றை 21-7 என சிந்து கைப்பற்ற, இரண்டாம் செட் மீதான எதிர்பார்ப்பு உச்சம் பெற்றது. 

இரண்டாவது சுற்றிலும் முழு ஆதிக்கத்தை செலுத்திய சிந்து அந்த செட்டையும் 21-7 என்று வென்று எடுத்தார். இதன் மூலம் 21-7 ,21-7 நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் பி.வி.சிந்து தட்டிச் சென்றார். மேலும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் பி.வி.சிந்து படைத்தார்.

இந்நிலையில் பி.வி.சிந்துவிற்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பி.வி.சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. இறுதிப் போட்டியில் தொடக்கம் முதல் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் ஒரு சாம்பியனை போல் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார்” என வாழ்த்து தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com