”அனபோலிக் ஸ்டீராய்டை பயன்படுத்தினேன்” தவறை ஒப்புக்கொண்ட தனலட்சுமி! தண்டனையின் முழு பின்னணி

”அனபோலிக் ஸ்டீராய்டை பயன்படுத்தினேன்” தவறை ஒப்புக்கொண்ட தனலட்சுமி! தண்டனையின் முழு பின்னணி

”அனபோலிக் ஸ்டீராய்டை பயன்படுத்தினேன்” தவறை ஒப்புக்கொண்ட தனலட்சுமி! தண்டனையின் முழு பின்னணி

அனபோலிக் ஸ்டீராய்டு எனும் ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தவறை ஒப்புக்கொண்டதால் தனலட்சுமிக்கான தண்டனை 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

தங்க மங்கையாக திகழ்ந்த தனலட்சுமி:

திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, சிறிய வயதில் தந்தையின் தூண்டுதலால் ஓட துவங்கி, தந்தையை இழந்த பின்னரும் பால் விற்று தொடர்ச்சியாக அவரை இந்தியாவிற்காக பல்வேறு பதக்கங்களை வெல்ல முயற்சிகளை மேற்கொண்டார் தனலட்சுமியின் தாயார் உஷா, கஷ்ட காலத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என போராடிய தனலட்சுமி டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பங்கேற்றார். ஒலிம்பிக்கில் அவருடைய கனவு தோல்வி அடைந்து இருந்தாலும் கடந்த ஜூன் மாதம் கசகிஸ்தானில் நடைபெற்ற Qosanov Memorial 2022 athletics தொடரில் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 22.89 வினாடிகளில் இலக்கை எட்டி தங்க பதக்கம் வென்றார்.

ஊக்கமருந்து பயன்படுத்தினாரா?

இதையடுத்து தனலட்சுமி, காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க இருந்தார். அதற்காக அவருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில், தனலட்சுமி தடை செய்யப்பட்ட ‘அனபோலிக் ஸ்டீராய்டு’ ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவர் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவருக்கு தடகள போட்டியில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

உண்மையை ஒப்புக்கொண்டதால் தண்டனை குறைப்பு!

இந்நிலையில், ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தவறை தனலட்சுமி ஒப்புக் கொண்டதால் தடைக்காலத்தை 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

அனபோலிக் ஸ்டீராய்டு என்றால் என்ன?

அனபோலிக் ஸ்டீராய்டுகள் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் ஆகும். ஹார்மோன் பற்றாக்குறை அல்லது குறைபாடு உடையவர்களுக்கு மருந்துவர்கள் குறைந்த அளவு பயன்படுத்தும் அறிவுறுத்தலோடு பரிந்துரைப்பர். ஆனால் சில விளையாட்டு வீரர்கள் முக்கியமாக பளு தூக்கும் வீரர்கள் தசை செயல்பாட்டை அதிகரிக்கவும் கொழுப்பை குறைக்கும் செயல்திறனை மேம்படுத்தும் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து - ஏன்?

இயல்பாக உடலின் மெட்டாபாலிசத்தில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் மருந்து என்பதால் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் அனபோலிக் ஸ்டீராய்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் இந்த ஸ்டீராய்டு இருப்பது கண்டறியப்பட்டால், அதை பயன்படுத்திய வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்கும் அளவுக்கு வலுவான விதிகளை பல விளையாட்டு வாரியங்கள் வைத்துள்ளன. இந்த மருந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் தான், தனலட்சுமிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com