\
இந்தியாவிற்கு 2வது பதக்கம் - சாதனை படைத்த வீரர்

இந்தியாவிற்கு 2வது பதக்கம் - சாதனை படைத்த வீரர்

இந்தியாவிற்கு 2வது பதக்கம் - சாதனை படைத்த வீரர்
Published on: 

லண்டனில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ள 8-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தபோட்டியின் ஆண்களுக்கான கிளப் த்ரோ போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அமித்குமார் சஹோரா, 30.25 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இது இந்தியாவிற்கு கிடைத்த 2வது பதக்கமாகும்.

முன்னதாக, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் சுந்தர்சிங் குர்ஜார், முதல் தங்கப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com