அமெரிக்க ஓபன்: அரை இறுதி சுற்றில் தோல்வி - டிவி நேரலையில் உடைந்து அழுத அமெரிக்க வீரர்

அமெரிக்க ஓபன்: அரை இறுதி சுற்றில் தோல்வி - டிவி நேரலையில் உடைந்து அழுத அமெரிக்க வீரர்
அமெரிக்க ஓபன்: அரை இறுதி சுற்றில் தோல்வி - டிவி நேரலையில் உடைந்து அழுத அமெரிக்க வீரர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி சுற்றில் தோல்வியடைந்ததை தொடர்ந்து டிவி நேரலையில் உடைந்து அழுதார் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோ.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 22-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்த்து விளையாடினார். 4 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19 வயதான கார்லோஸ் அல்கராஸ் 6-7 (6-8), 6-3, 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்தபின் டிவி நேரலையில் பேசிய அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோ தோல்வியடைந்ததை நினைத்து உடைந்து அழுதார். பேச முடியாமல் அவரது குரல் தழுதழுத்தது. இதையடுத்து ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்திய நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இறுதிப் போட்டியில் பட்டம் வெல்பவர்கள் சாம்பியன் கோப்பையுடன் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் கைப்பற்றுவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com