அமெரிக்க ‌ஓபன் டென்னிஸ்: சானியா இணை 2ஆவது சுற்றுக்குத் தகுதி

அமெரிக்க ‌ஓபன் டென்னிஸ்: சானியா இணை 2ஆவது சுற்றுக்குத் தகுதி

அமெரிக்க ‌ஓபன் டென்னிஸ்: சானியா இணை 2ஆவது சுற்றுக்குத் தகுதி
Published on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங்க் சுவாய் இணை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சானியா இணை, குரோஷியாவின் பெட்ரா மார்டிக் - டோனா வெகிக் இணையை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் சானியா இணை வெற்றி பெற்றது. நாளை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றில் ஸ்லோவாக்கியாவின் ரிபென்கோவா‌-செபிலோவா இணையுடன், சானியா-பெங்க் இணை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com